#image_title
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2005 ல் வெளியான’ இதயத்திருடன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தனர் நடிகை காம்னா. இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. நடிகை காம்னா மும்பையை பூர்வீகமாக கொண்டவர் . கல்லூரி படிக்கும் பொழுதே மாடலிங்கில் ஆர்வம் கொண்ட 2004ல் நடைபெற்ற மும்பை அழகி 2-வது இடத்தை பிடித்தார்.
இதைத்தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர், 2005ல் ‘பிரேமிக்குலு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் முதன்முதலாக கால் பதித்தார். இதைத்தொடர்ந்து இயக்குனர் சரன் இயக்கத்தில் , நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2005ல் வெளியான இதயத்திருடன் படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார்.
தமிழில் இவர் அடுத்ததாக நடிகர் ஜீவன் நடிப்பில் வெளியான ‘மச்சக்காரன்’ படத்தில் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்பை தேடி தரவில்லை. அதன் பின்னர் ராஜாதிராஜா, காசேதான் கடவுளடா போன்ற ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். பின்பு தமிழில் எந்த ஒரு திரைப்படமும் கிடைக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் நடிப்பில் இறுதியாக 2019ல் ‘கருடா’ என்னும் கன்னட படம் வெளிவந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். தற்போழுது இவர் தனது லேட்டஸ்ட் லுக்கில் பதிவு செய்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ இதயதிருடன் பட நடிகையா இது..?’ என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் வீடியோ…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…