இந்த சீன்ல போண்டாமணி நடிக்கலான நாங்க நடிக்கவே மாட்டோம்னு சொன்ன வடிவேலு மற்றும் முரளி.. பல வருடங்களுக்கு பிறகு வெளியான சுவாரசிய தகவல்..

By Sumathi

Updated on:

நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் இன்று காலமாகி விட்டார். தமிழில் பல படங்களில் வடிவேலு காமெடி காட்சிகளில் நடித்திருந்தார். குறிப்பாக, கண்ணும் கண்ணும் படத்தில் வடிவேலுவிடம், குளத்துக்குள் இருந்து எழுந்துவந்து ‘அண்ணே, போலீஸ் வந்தாங்களே, ஏதாச்சும் சொன்னீங்களா, சொல்லிராதீக, அடிச்சுக்கூட கேப்பாக, அப்பவும் சொல்லிராதீக என்ற சொல்லிக்கொண்டே ஓடுவார். மற்றொரு படத்தில், டுபாக்கூர் என்ற ஓட்டலை நடத்திக்கொண்டிருக்கும் போண்டாமணி ஓட்டலில் வடிவேலு ஊத்தாப்பம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் காட்சி மிக பிரபலமான காமெடியாக அமைந்தது.

   

ஒரு படத்தில், பஸ்சில் பாம்பாட்டியாக பாம்புவுடன் பஸ்சுக்குள் அமர்ந்து, கண்டக்டர் வடிவேலுவை டார்ச்சர் செய்வார். ஒரு படத்தில், அக்கா குளிப்பதை வீடியோ எடுத்து வெளியிடலாம் என வடிவேலுவிடம் யோசனை சொல்லி, உங்க பொண்டாட்டியை தான் அக்கான்னு சொல்லுறோம் என்று வடிவேலுவை கடுப்பேத்துவார். இப்படி பல படங்களில் அசத்தலான காமெடி காட்சிகளில் நடித்த போண்டாமணி, சமீபத்தில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு பலரது உதவியால் சிகிச்சை பெற்று குணமடைந்தார். எனினும் தொடர்ந்து உடல் பலவீனமாக இருந்த அவர், 60 வயதான நிலையில் இன்று மறைந்துவிட்டார். மறைந்த போண்டாமணி முன்பு ஒரு முறை தந்த நேர்காணலில் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அதில் ஒரு காட்சியில் அவர் நடித்தால் மட்டுமே, நாங்கள் இந்த படத்தில் நடிப்போம் என 2 பிரபல நடிகர்கள் சொல்லி, அந்த காட்சியில் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்ததை கூறியிருக்கிறார்.

அதில் போண்டாமணி கூறியதாவது, சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இயக்குநர் ஒரு மலையாள டைரக்டர். அந்த படத்தில் கல்யாண கூட்டத்தை திருப்பதிக்கு அழைத்துச் செல்ல சுந்தரா டிராவல்ஸ் பஸ்சுடன் முரளி, வடிவேலு அங்கு வந்து இருப்பார்கள். மாப்பிள்ளையாக நடிக்க அந்த படத்தின் புரடியூசர் தங்கராஜ், மேக்கப் போட்டு தயாராக இருக்கிறார். அப்போது அந்த மாப்பிள்ளை கேரக்டரில் போண்டா மணிதான் நடிக்க வேண்டும் என நடிகர்கள் முரளி, வடிவேலு இருவரும் கூறிவிட்டனர். அந்த காட்சி மிக முக்கியமானது.

அதில் ஏற்கனவே மலையாளத்தில் நடித்தவர்தான் நடிக்க வேண்டும். இவர் வேண்டாம் என டைரக்டர் கூறியும் முரளி, வடிவேலு கேட்கவில்லை. அந்த சீனில் போண்டா மணி நடித்தால் மட்டுமே நாங்கள் நடிப்போம். இல்லை என்றால் நாங்கள் சினிமாவை விட்டு போய்விடுவோம் என்று இரண்டு பேருமே கண்டிப்பாக கூறிவிட்டனர். என்மீது அவர்கள் அவ்வளவு நம்பிக்கை வைத்து அந்த காட்சியில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தனர். 250 அடி ஒரே டேக்கில் எடுத்து முடிக்கப்பட்டது. அதில் மாப்பிள்ளையான என் மீது பஸ் கரும்புகையை கொட்டி விடுவது இன்னும் பெரிய காமெடியாக அமைந்துவிட்டது, என்று கூறியிருக்கிறார் போண்டாமணி.

author avatar
Sumathi