வளைகுடா பகுதியில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் போக்கு, கடந்த மாதம் எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஆனால், அந்த அமைதி சில வாரங்கள் கூட நீடிக்காத நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த திடீர் மோதல் வெடிப்பிற்குப் பின்னால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் தீட்டிய ரகசிய சதித்திட்டம் தொடர்பான விவகாரம் இருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பைக் குறிவைத்து ஈரான் காய்களை நகர்த்தி வருவதாக, இஸ்ரேல் உளவுத்துறை அமெரிக்காவுக்கு அனுப்பிய ரகசிய எச்சரிக்கைதான் இந்த ஒட்டுமொத்த திருப்பத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான உறவு சற்றே மேம்பட்டு வந்த சூழலில், டிரம்ப்பை ‘காலி செய்ய’ ஈரான் போட்ட திட்டத்தை இஸ்ரேல் அம்பலப்படுத்தியது. இந்த உளவுத் தகவல் கிடைத்த உடனேயே, அமெரிக்கா தனது ராணுவத் தாக்குதல்களை ஈரான் மீது மீண்டும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், இந்த உளவுத் தகவலின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியிலேயே சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஈரானில் உள்ள தற்போதைய அரசை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரமாக உள்ளார். ஆனால், உலகப் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு போரை முடிக்க டிரம்ப் முயன்றதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால், அமெரிக்காவை மீண்டும் போருக்குள் இழுக்க இஸ்ரேல் திட்டமிட்டு இந்த உளவுத் தகவலைப் பயன்படுத்தியதோ என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
அதேநேரம், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் முக்கிய தளபதி காசிம் சுலைமானி ஆகியோர் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க டிரம்ப்பைத் தீர்த்துக்கட்ட ஈரான் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. இத்தகைய பரபரப்பான சூழலில், அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் தொலைபேசி வாயிலாகப் பேசி, வளைகுடா பகுதியில் அமெரிக்கா எடுத்து வரும் அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளதுடன், தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…