சாதனை மேல் சாதனை படைக்கும் ஏ. ஆர். ரஹ்மான்… இசைப்புயலுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்…

By Begam on ஏப்ரல் 25, 2024

Spread the love

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கிய முன்னணி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தார். தற்பொழுது இவர் பல ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

   

மணிரத்னம், கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘தக் லைஃப்’ படம் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் போட்ட மியூசிக் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

   

 

ஆனால் ‘ஆடு ஜீவிதம்’ படத்துக்கு அவர் போட்ட பாடல்களும், பின்னணி இசையும் நிச்சயம் அவருக்கு இந்த ஆண்டு விருதுகளை பெற்றுத் தரும் என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லதா மங்கேஷ்கர் குடும்பம் சார்பில் கொடுக்கப்படும் ‘லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது’ நேற்று அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.

‘மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்வர் புரஸ்கார் விருது’ ஏ.ஆர். ரஹ்மானுக்கு மும்பையில் நேற்று வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளை பெற்ற ஏ.ஆர். ரஹ்மான், அந்த விருதுகளை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.