விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கும் சண்டைக்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த வார இறுதி ஹாட் டாபிக்காக மாறியது ஜோவிகா விசித்ரா சண்டை தான். கடந்த வார நாமினேஷனில் பவா செல்லதுரை, அனன்யா, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் இருக்கின்றனர். இதில் அனன்யா நேற்று முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.
இவரைத்தொடர்ந்து பவா செல்லத்துரை சுயவிருப்பதின் பேரில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியானது பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தினம் ஒரு சண்டையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரை என இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வருவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் VJ அர்ச்சனா வைல்ட் கார்ட் மூலம் விரைவில் என்ட்ரி ஆகப்போகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புதிய புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…
பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏராளமான உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள்…
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த லெட்சுமணன் (15) என்ற பத்தாம் வகுப்பு மாணவன், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் கொடூரமாகக்…
சேலத்தில் தங்கி படித்து வந்த நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் விடுதியில் உயிரிழந்து…
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் கணிக்க…
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…