“எப்போ பார்த்தாலும் இதே வேலையா போச்சா”… பார்த்திபனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ப்ளூ சட்டை மாறன்… வைரலாகும் அந்த ஒரு பதிவு…!

Spread the love

திரைப்பட இயக்குனர் பார்த்திபன், பவன் கல்யாண் நடித்த ‘உஸ்தாத் பகத் சிங்’ பட விழாவில் தன்னை “நாயுடு அப்பாயி” என்று அறிமுகப்படுத்திக் கொண்டது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தில் சாதி அரசியலுக்கு அப்பாற்பட்டவராகக் காட்டிக்கொள்ளும் அவர், அண்டை மாநிலத்தில் தனது சாதி அடையாளத்தை வெளிப்படுத்தியது ஏன் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே மேடையில் பவன் கல்யாண் அடுத்த முதல்வர் ஆவார் என்று அவர் புகழ்ந்து பேசியது ஆந்திர ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், தமிழக ரசிகர்களிடையே இது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். எந்தவித உள்நோக்கமும் இன்றி எதார்த்தமாகவே அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இருப்பினும், அண்மைக்காலமாக அவர் அடிக்கடி இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவதால், அவரது இந்த மன்னிப்பை ரசிகர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.

இச்சூழ்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது பாணியில் பார்த்திபனைச் சாடியுள்ளார். “எப்போதாவது தவறினால் பரவாயில்லை… அடிக்கடி தவறுது” என அவர் பதிவிட்டுள்ள ஒற்றை வரி, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் அமைந்துள்ளது. ஏற்கனவே திரிஷா தொடர்பான கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன், அது அடங்குவதற்குள் அடுத்தடுத்த விவாதங்களில் சிக்கி வருவதை மாறன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், மன்னிப்பு கேட்ட பிறகும் ஏன் இந்தப் பிரச்சனையை மீண்டும் கிளறுகிறீர்கள் என ஒரு தரப்பும், தவறு செய்பவர்களைச் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை என மற்றொரு தரப்பும் மோதி வருகின்றனர்.

தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பதும், பின்னர் அதற்கு விளக்கம் அளிப்பதும் பார்த்திபனுக்கு வழக்கமாகிவிட்டதாகத் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. திரையுலகில் நீண்ட அனுபவம் கொண்ட ஒருவர், பொதுமேடைகளில் பேசும்போது சமூகப் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவு பார்த்திபன் மீதான விமர்சனங்களை மீண்டும் ஒருமுறை சூடுபிடிக்க வைத்துள்ள நிலையில், இந்த சர்ச்சை இத்துடன் முடிவுக்கு வருமா அல்லது மேலும் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Muthu Mani

Recent Posts

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

5 minutes ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

8 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

17 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

24 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

29 minutes ago