விலையைக் கேட்டா தலைசுத்திடும்… முதல்வர் விஜய் உடையில் ஒளிந்திருக்கும் அந்த ‘ஒரு’ ஆடம்பர விஷயம்…!

Spread the love

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தற்பொழுது அரசு நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளின் போது வெள்ளை சட்டை மற்றும் கருப்பு நிற கோட் சூட் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது இந்த ஸ்டைலான தோற்றம் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவர் சமீபத்தில் அணிந்திருந்த பெல்ட் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற ஆடம்பர பிராண்டான ‘லூயிஸ் விட்டான்’ நிறுவனத்தின் பெல்ட்டைத் தான் அவர் அணிந்துள்ளார். இதன் முகப்பில் கம்பீரமாக காட்சியளிக்கும் என்ற எழுத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள லூயிஸ் விட்டான் நிறுவனத்தின் பிரத்யேகப் பட்டறைகளில் தயாரிக்கப்படும் இந்த பெல்ட்களின் ஆரம்ப விலையே ₹60,000 முதல் ₹1.14 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்பொழுது முதல்வர் விஜய் அணிந்திருக்கும் பெல்ட்டின் விலை சுமார் ₹70,000 முதல் ₹1 லட்சம் வரை இருக்கலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இவ்வளவு விலை உயர்ந்த இந்த பெல்ட்டின் மிக முக்கிய சிறப்பம்சமே, இதனை இரண்டு பக்கமும் மாற்றி (Reversible) அணிந்து கொள்ள முடியும் என்பதுதான். இதன் ஒருபுறம் லூயிஸ் விட்டான் பிராண்டின் பாரம்பரிய அடையாளமான டேமியர் அல்லது மோனோகிராம் கேன்வாஸ் வடிவமைப்பும், மறுபுறம் நேர்த்தியான ஃபார்மல் உடைகளுக்கு ஏற்ற சாதாரண கருப்பு நிற தோற்றமும் கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலத்திற்கு தேயாமல் உழைக்கக்கூடிய மிக உயர்தரமான தோல் மெட்டீரியல் கொண்டு இந்த பெல்ட்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரே பெல்ட்டில் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட்டப்களைக் கொடுப்பதால், விஜய் போன்ற பல முன்னணி பிரபலங்களின் முதல் தேர்வாக இது இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த ஆடம்பரமான லூயிஸ் விட்டான் பெல்ட்களை வாங்க விரும்புபவர்கள், லூயிஸ் விட்டான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்றோ அல்லது அவர்களின் பிரத்யேக ஷோரூம்களுக்குச் சென்றோ நேரடியாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

SATHISH R

Recent Posts

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

2 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

8 minutes ago

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

21 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

22 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

28 minutes ago