தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இதற்கான தீர்மானத்தை முன்னெடுத்துள்ள சூழலில், விஜய்க்குப் பலத்த போட்டியைக் கொடுக்க திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டு வருகிறது.
இது குறிப்பாக, அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும் தற்போதைய நாகை தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஆளூர் ஷா நவாஸ் பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்த்துப் போட்டியிடக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது. பெரம்பூர் தொகுதியில் கணிசமாக உள்ள சிறுபான்மையின வாக்குகளைக் குறிவைத்து விசிக இந்தக் காயை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது.
மேலும் விசிகவுக்கு ராயபுரம், ஆர்.கே நகர் அல்லது பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் ஒன்றை ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையில், ஒருவேளை விஜய் பெரம்பூரில் களம் கண்டால் அவரை எதிர்த்து ஆளூர் ஷா நவாஸை நிறுத்துவதன் மூலம் கடுமையான போட்டியை உருவாக்க விசிக விரும்புகிறது.
அதேசமயம், விஜய் போன்ற ஒரு பெரிய ஆளுமை போட்டியிடும் பட்சத்தில், கூட்டணி தர்மத்தை மீறி திமுகவே நேரடியாக அங்கு களம் காணவும் வாய்ப்புள்ளதாக மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதனால் பெரம்பூர் தொகுதி இப்போதே நட்சத்திர அந்தஸ்து பெற்று தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…