Categories: CINEMA

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மகன் இவ்ளோ பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறாரா?… வைரலாகும் தகவல்…

தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பணியின் போது மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்பொழுது மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  நடிகர் மாரிமுத்து தனது சொந்த மாமன் மகளான பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தற்பொழுது நடிகர் மாரிமுத்துவின் மகனான அகிலன் மாரிமுத்து மிகப்பெரிய IT கம்பெனியான Zoho என்ற நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், பல லட்சங்கள் சம்பளமாய் பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் பலரும் ‘ எப்படியோ அம்மாவை மட்டும் நல்லா பாத்துக்கோங்க’  என்று கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

கருப்பு கலர் சேலையில்.. காந்தப்பார்வை வீசி ரசிகர்களை ஈர்க்கும் விஜே அஞ்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய…

1 hour ago

அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல்…

2 hours ago

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

4 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

4 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

7 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

12 hours ago