#image_title
விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குக் வித் கோமாளியின் 4 சீசன்களில் நடுவர்களாக வெங்கடேஷ் பட், தாமு ஆகியோர் இருந்தனர்.
ஆனால் ஐந்தாவது சீசனில் ஏராளமான மாற்றங்கள் உண்டானது. மேலும் வெங்கடேஷ் பட் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார். இரண்டு நிகழ்ச்சிகளும் சுவாரசியமாக நடைபெறுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அக்ஷய் கமல், ஷாலின் சோயா, திவ்யா துரைசாமி, ஸ்ரீகாந்த் தேவா, ஒரு உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர்.
ஐந்தாவது சீசன் முதல் வாரத்தில் சுஜிதாவும், இரண்டாவது வாரத்தில் வசந்த் வசி, அக்ஷய் கமல் ஆகியோரும் செக் ஆப் தி வீக் வாங்கியுள்ளனர். இந்த வாரம் எலிமினேஷன் வாரம். இந்நிலையில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் டிடிஎச் வாசனின் காதலி ஷாலின் சோயா ஆகியோர் டேஞ்சரஸ் சோனில் இருந்தனர். இதில் ஷாலின் சோயா எலிமினேட் செய்யப்பட்டதாக தெரிகிறது.
அவர் பல வருடங்களாக திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் அப்போது எனக்கு கிடைக்காத புகழும் பெயரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன் என சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஷாலின் சோயா மீண்டும் வைல்ட் காடு சுற்றின் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…