தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பணியின் போது மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்பொழுது மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் மாரிமுத்து தனது சொந்த மாமன் மகளான பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

தற்பொழுது நடிகர் மாரிமுத்துவின் மகனான அகிலன் மாரிமுத்து மிகப்பெரிய IT கம்பெனியான Zoho என்ற நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், பல லட்சங்கள் சம்பளமாய் பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் பலரும் ‘ எப்படியோ அம்மாவை மட்டும் நல்லா பாத்துக்கோங்க’ என்று கூறி வருகின்றனர்.

