Categories: CINEMA

‘தலைவர் 171’ வில்லன் இவர் தானா…? பிரபல நடிகரை தட்டி  தூக்கிய லோகேஷ்… அப்படின்னா வேற லெவல் சம்பவம் இருக்கு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஒரே வாரத்தில் உலக அளவில் 375.40 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் எந்த அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்ததில்லை இதைத்தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல்வேறு முறையில் கொண்டாடியது . தற்பொழுது மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தலைவர் 171 திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளது.

ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்புகளில் ஒன்று தான் தலைவர்171. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தலைவர்171 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அண்ணாத்த மற்றும் ஜெயிலர் படங்களைத் தொடர்ந்து வரிசையாக மூன்றாவது முறை தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைகிறது சன் பிக்சர்ஸ். ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கும் இப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தளபதி 171 படத்தின் வில்லன் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள நிலையில், அதற்கு முன் வில்லன் ரோல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்  என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Begam

Recent Posts

வைரமுத்துன்னா சும்மாவா..! ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நெப்போலியன், விஜயகுமார் மீசையை வைத்து பாட்டு எழுதிய வைரமுத்து..!

தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…

17 mins ago

AR. முருகதாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் சல்மான் கான்.. உருளப்போகும் சிவகார்த்திகேயனின் தலை.. என்ன நடக்கப்போகுதோ..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை…

57 mins ago

வைரலான ஆடியோ நோட்.. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் எடுத்த அதிரடி முடிவு.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…

2 hours ago

“இவன உலகத்துக்கே பிடிக்கும்… ஆனா எனக்குப் பிடிக்காது” – மோகன்லாலை பற்றி கசப்பான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை மெட்டி ஒலி சாந்தி!

சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…

3 hours ago

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…

3 hours ago

கையில் கட்டுடன் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. வியந்துபோன வெளிநாட்டினர்.. புகைப்படங்கள் வைரல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…

3 hours ago