பிக் பாஸ் சீசன் 6 பங்கேற்றுள்ள மாடல் அழகியான செரீனா தற்பொழுது தமிழ் சினிமாவில் ஏற்கனவே நடித்த ஒரு நடிகை என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த சீசன் தற்பொழுது 3 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் ஜிபி முத்து மற்றும் நடன கலைஞரான சாந்தி வெளியேற தற்பொழுது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சுவாரசியமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

இந்த வாரம் கமல் மாடல் அழகியான ஷெரினாவை வெளுத்து வாங்கியுள்ளார். தற்பொழுது இவர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டு ஷெரினாவை நம் அனைவருக்கும் மாடலாக மட்டும் தான் தெரியும்.

இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘வினோதய சித்தம்’ படத்தில் தம்பி ராமையாவின் மகனின் மனைவியாக ‘மகாலட்சுமி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷெரினா. தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் கேரளாவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்து படிப்பை முடித்த பின் விமான பயலாட்டாக நினைத்தவர்.

எதிர்பாராத விதமாக மாடலுக்கு வந்து அப்படியே சினிமா பயணத்தில் இணைந்து கொண்டார். வினோதய சித்தம் திரைப்படத்திற்கு முன்னரே இவர் ‘அஞ்சாமை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து பல படங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தால், தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

தற்பொழுது இவர் சமுத்திரக்கனி, தம்பி ராமையா மற்றும் படத்தில் நடித்த மற்ற நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
