நடிகை ராதா கேரளாவில் உள்ள தனது அம்மாவின் வீட்டை ஹோம் டூர் வீடியோவாக இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவருமே 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள். நடிகை அம்பிகா தனது 14 வயதில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து 1979இல் வெளியான ‘சக்காளத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை அம்பிகாவை தொடர்ந்து திரை உலகில் கால் பதித்தவர் அவரது சகோதரி நடிகை ராதா. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இவரும் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரை தொடர்ந்து இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் குடும்பத்தோடு அம்மாவின் வீட்டிற்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் நடிகை அம்பிகா மற்றும் ராதா.

அந்த வகையில் நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவரும் தங்களது குடும்பத்தோடு இணைந்து தங்களது அம்மா வீட்டில் பண்டிகையை கொண்டாடிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ராதா தற்பொழுது இணையத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ படு வைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோ இதோ….
