இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி (IRCTC), தெற்கு மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் ‘ஹாஸ்பிடாலிட்டி மானிடர்ஸ்’ (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 84 காலியிடங்கள் உள்ளன. பி.எஸ்சி (B.Sc), பி.பி.ஏ (BBA) அல்லது எம்.பி.ஏ (MBA) உள்ளிட்ட படிப்புகளை முடித்த, 18 முதல் 27 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள நபர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்பதோடு, இந்த ஒப்பந்த காலம் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் வரும் ஏப்ரல் 25, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் ‘வாக்-இன் இன்டர்வியூ’ (Walk-in Interview) எனப்படும் நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை சேத்துப்பட்டில் உள்ள ஐஆர்சிடிசி அலுவலக முகவரியில் நடைபெறும். நேர்காணலுக்குச் செல்பவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களைக் கொண்டு செல்ல வேண்டும். இது குறித்த விரிவான தகவல்களை irctc.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…