“இனிமே இங்கே வராதே”… அமெரிக்க கப்பலை மிரட்டி விரட்டிய ஈரான்… ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த பகீர் சம்பவம்… பதறவைக்கும் 60 விநாடி வீடியோ..!!!

Spread the love

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் கடற்படை வெளியிட்டுள்ள எச்சரிக்கை வீடியோ சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 60 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஈரானின் செபா கடற்படைத் தளபதி ஒருவர் அமெரிக்காவின் 121-ம் எண் போர்க்கப்பலை உடனடியாக இந்தியப் பெருங்கடலுக்குத் திரும்புமாறு எச்சரிப்பதும், மீறினால் தாக்குதலுக்கு உள்ளாவீர்கள் என்று மிரட்டுவதும் பதிவாகியுள்ளது.

இந்த வழித்தடத்தில் செல்லும் மற்ற கப்பல்கள் 10 கிலோமீட்டர் தூர இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் கடும் தொனியில் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இந்த மோதல் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரான் தனது எல்லையைப் பாதுகாப்பதாகக் கூறினாலும், அமெரிக்கா இந்த வீடியோவை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இதனால் மாறாக, ஹார்முஸ் ஜலசந்தியில் தனது போர்க்கப்பல்கள் கண்ணிவெடி அகற்றும் பணிகளையே மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் வழித்தடத்தில் ஈரானின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது என்றும், சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தால் ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Rajeshwari

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

2 மணத்தியாலங்கள் ago