கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா – ஈரான் இடையேயான போர், ஒரு மாத கால அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறந்தது. ஆனால், தாங்கள் குறிப்பிடும் குறிப்பிட்ட பாதையில் மட்டுமே சர்வதேசக் கப்பல்கள் செல்ல வேண்டும் என்றும், இல்லையெனில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை மீறியதாகக் கூறி ஒரு சரக்குக் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி சூழல் மீண்டும் சீர்குலைந்தது.
ஈரானின் இந்த நடவடிக்கையால் கோபமடைந்த அமெரிக்கா அதன் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தது. கடந்த இரண்டு நாட்களாக இரு நாடுகளும் மாறி மாறித் தீவிரமான ராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் ஏற்பட்ட உடன்பாட்டால் உலக மக்கள் நிம்மதியடைந்திருந்த வேளையில், இந்த திடீர் போர் பதற்றம் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் மீண்டும் பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரான் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது; அமெரிக்காவின் பொறுமைக்கு எல்லை உண்டு, ராணுவ ரீதியாக இந்த மோதலை முடிக்க நேர்ந்தால் ஈரான் என்ற நாடே உலக வரைபடத்தில் இல்லாமல் போய்விடும்” என மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் அங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் வாழும் நரகத்திற்குத் தள்ளும்; இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பேச்சை அமெரிக்கா கேட்பதால் ஒட்டுமொத்த பிராந்தியமும் எரியப் போகிறது” என்று பதிவிட்டுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…