டிரம்புக்கு விழுந்த மரண அடி…. 415 கோடி ரூபாய் அமெரிக்க ட்ரோனை வெறும் 1 கோடியில் அலேக்காக தூக்கிய ஈரான்…. வீடியோ கேம் ஆடிய அமெரிக்காவுக்கு ஆப்பு….!

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் ராணுவ வியூகங்களுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் அமெரிக்காவின் ‘MQ-9 ரீப்பர்’ ட்ரோனை, ஈரான் மிக எளிதாக சுட்டு வீழ்த்தியிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 415 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அதிநவீன கொலைகாரக் கருவியை, வெறும் 1.25 கோடி ரூபாய் மட்டுமே மதிப்புள்ள ஒரு சிறிய ஏவுகணையைக் கொண்டு ஈரான் தகர்த்தெறிந்துள்ளது அமெரிக்காவிற்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

வானத்தில் பறக்கும் இந்த ‘MQ-9 ரீப்பர்’ ட்ரோன், சாதாரண கண்காணிப்பு ட்ரோன்களைப் போன்றது அல்ல; இது பல வித்தைகளையும் ஆபத்தான ஆயுதங்களையும் கைவசம் வைத்திருக்கும் ஒரு நடமாடும் போர்விமானமாகும். சுமார் 1,700 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோனில், அதிபயங்கர ‘ஹெல்ஃபயர்’ (Hellfire) ஏவுகணைகளையும், லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கும் சிறிய ரகக் குண்டுகளையும் பொருத்த முடியும். மழை, புயல், கடுமையான வெயில் என எத்தகைய மோசமான வானிலையிலும் தொடர்ந்து 24 மணி நேரம் பறக்கும் திறன் படைத்தது. மேலும், பூமியிலிருந்து 50,000 அடி உயரத்தில் பறக்கும் என்பதால், கீழே இருப்பவர்களால் இதை வெறும் கண்களால் கண்டறியவே முடியாது.

இவ்வளவு உயரத்தில் பறந்தாலும், இதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன அகச்சிவப்பு கேமராக்கள் (Infrared cameras), லேசர் டிசைனேட்டர்கள் மற்றும் சென்சார்கள் தரையில் இருக்கும் மனிதர்களைக்கூட மிகத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டிவிடும். உலகின் எந்தப் பகுதியில் இந்த ட்ரோன் பறந்து கொண்டிருந்தாலும், அமெரிக்காவில் அமர்ந்து கொண்டு ஒரு வீடியோ கேம் விளையாடுவதைப் போல ரிமோட் கண்ட்ரோல் மூலம் இதனை மிக எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். இத்தகைய அசாத்திய தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன் தான், ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள குஜெஸ்தான் வான்வெளியில் பறந்தபோது ஈரான் ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளானது.

ஈரான் ஏவிய சிறிய ஏவுகணை, இலக்கை நோக்கித் துல்லியமாகப் பாய்ந்து இந்த பிரம்மாண்ட ட்ரோனை ஒரே நொடியில் உருத்தெரியாமல் அழித்தது. தரையில் விழுந்த ட்ரோனின் பாகங்களை மீட்டெடுத்த ஈரான் படைகள், அதனை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டு அமெரிக்காவின் முகத்திரையைக் கிழித்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், “உலகிற்கே நாட்டாமை தனம் செய்யும் அமெரிக்காவால், ஒரு சிறிய ஏவுகணையிடம் இருந்து தனது காஸ்ட்லி ட்ரோனைக் கூடக் காப்பாற்ற முடியவில்லையே” என்று நெட்டிசன்கள் டொனால்ட் டிரம்பை கடுமையாகக் கலாய்த்து, வறுத்தெடுத்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

11 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

19 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

30 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

1 மணத்தியாலம் ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago