“யோ.. நீ இருக்குற வரைக்கும் அது நடக்காது”… டிரம்ப் தலையில் இடியை இறக்கிய ஈரான்… உலக நாடுகளை அதிரவைத்த அந்த அறிவிப்பு…!

Spread the love

வளைகுடாப் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் போக்கு உச்சமடைந்த நிலையில், சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய உயிர்நாடியான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் விளைவாக, ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து, பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின. நிலைமையைக் கட்டுப்படுத்த ஹார்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் தொடக்கத்தில் நிராகரித்த போதிலும், சில மாதங்களுக்கு முன்பு எட்டப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

எனினும், இந்த அமைதி ஒப்பந்தம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. போர் நிறுத்தத்திற்குப் பிறகும் ஹார்மூஸ் வழியாகச் சென்ற சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தது. தற்சமயம் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி ராணுவத் தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், முறையான சமாதான உடன்படிக்கை எதுவுமின்றித் பதற்றமான சூழலே நீடித்து வருகிறது. இதனிடையே, தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகள் மற்றும் பிராந்திய அரசியலை முன்வைத்து அமெரிக்காவிற்கு ஈரான் தனது கடுமையான நிபந்தனைகளைத் தற்போது அறிவித்துள்ளது.

அமெரிக்கா தங்கள் நிபந்தனைகளை உடனடியாக ஏற்காவிட்டால், அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடிவடையும் ஆண்டான 2029 வரை ஹார்மூஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் இழப்பீடாக சுமார் 28.62 லட்சம் கோடி ரூபாய் (3.5 டிரில்லியன் டாலர்) வழங்கப்பட வேண்டும், மேற்காசிய பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் ஆகிய வலுவான கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது. இந்த நிபந்தனைகளால் சர்வதேச சந்தையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… பேருந்து டயரில் சிக்கிய பைக்… மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலி… கேரளா சாலையில் நடந்த திடுக்கிடும் விபத்து…!!

சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…

7 minutes ago

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

29 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

9 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 மணத்தியாலங்கள் ago