“நாங்கள் பயப்பட மாட்டோம்”… கடைசி நிமிடம் வரை கெஞ்சிய நாடுகள்.. திட்டவட்டமாக மறுத்த ஈரான்… இன்று இரவு தொடங்கப்போகும் ‘மகா யுத்தம்’…!

Spread the love

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் கருமையடைந்துள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை இரவு வரை ஈரானுக்குக் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்படாவிட்டால், அந்நாட்டை முழுமையாக அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்படும் என அவர் மிரட்டியுள்ளது உலக நாடுகளிடையே உச்சகட்ட பீதியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்கப் போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை ஒரு நேரடிப் போராக மாற்றியுள்ளது.

இந்தப் போரைத் தடுக்க பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து தீவிர மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோரிடம் 45 நாட்கள் போர்நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய வரைவுத் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்ட இந்த வரைவு, முதற்கட்டமாக உடனடி அமைதியையும், இரண்டாம் கட்டத்தில் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த நிரந்தரத் தீர்வையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

இருப்பினும், இந்த அமைதித் திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. வெறும் போர்நிறுத்தத்தை மட்டும் ஏற்க முடியாது என்றும், மீண்டும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்பதற்கான சர்வதேச உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே போரை நிறுத்த முடியும் என்றும் எகிப்திலுள்ள ஈரான் தூதர் மொஜ்தபா பெர்டோசிபூர் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் மிரட்டல்களை “முட்டாள்தனமானது” என்று வர்ணித்துள்ள ஈரான், அமெரிக்காவின் எச்சரிக்கையைப் பற்றி கவலைப்படாமல் தனது தாக்குதல் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ட்ரம்ப் விதித்த காலக்கெடு இன்று இரவுடன் முடிவடையும் நிலையில், மத்தியஸ்த முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதால் ஒரு பெரும் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதும், ஈரானும் பின்வாங்க மறுப்பதும் சர்வதேச எரிபொருள் சந்தை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இன்று இரவு என்ன நடக்கும்? உலகம் ஒரு பெரும் அழிவைத் தவிர்க்குமா அல்லது போர் முழக்கம் கேட்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

2 மணத்தியாலங்கள் ago