ஒரே நாளில் குவைத், துபாய் மீது ஏவுகணை மழை… கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி?… ஈரான் அதிபர் விடுத்த நடுங்க வைக்கும் வார்னிங்…!

Spread the love

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் இன்று குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்கு வைத்து அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான், அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளான அரபு நாடுகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, துபாயில் உள்ள அமெரிக்காவின் இரண்டு முக்கிய பதுங்கு குழிகள் மீது ஈரானின் ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கியதில், அங்கு தங்கியிருந்த நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை மிக முக்கியமானது. தங்கள் மீதான தாக்குதல்களுக்கு அரபு நாடுகள் தங்களின் நிலத்தைப் பயன்படுத்த அனுமதித்தால், அந்த நாடுகளின் பொருளாதார மையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது கடும் பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் பெசேஷ்கியான் தெளிவுபடுத்தியுள்ளார். சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் போன்ற நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருப்பதால், போர் பரவும் அபாயம் தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது.

துபாயில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை கூறுகையில், 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இருந்த தளங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மீட்புப் பணிகளுக்காக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் அங்கு குவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க வீரர்கள் இந்தப் பிராந்தியத்தை விட்டு வெளியேறாவிட்டால், இது அவர்களின் கல்லறையாக மாறும் என்றும் ஈரான் ராணுவம் ஆவேசமாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் ஈரானின் பதிலடி கொடுக்கும் திறனை உலகிற்கு நிரூபிக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்காவின் மத்திய கட்டளைப்படை (US Central Command) திட்டவட்டமாக மறுத்துள்ளது. துபாயில் அமெரிக்கப் படையினர் எவரும் தாக்கப்படவில்லை என்றும், ஈரான் தனது ராணுவ இழப்புகளை மறைக்க சமூக வலைதளங்களில் போலிச் செய்திகளைப் பரப்பி வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இரு நாடுகளும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் இந்த உச்சக்கட்ட பதற்றம் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பக்தர்கள் கோமியத்தைக் குடிப்பது கட்டாயமா..? கங்கோத்ரி கோயில் பெயரில் பரவும் அதிரடி வதந்தி.. பின்னணியில் இருக்கும் உண்மை என்ன..?

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…

2 minutes ago

தலைகீழான உலகம்..! பாம்பின் தலையைத் தின்னும் நண்டு… இணையத்தை அதிரவைக்கும் ‘பகீர்’ வீடியோ! இயற்கையின் விசித்திர வேட்டை..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …

16 minutes ago

“ஜிம்முக்கு போ.. பாய்ஃப்ரெண்ட் இருக்கா? – TCS அலுவலகத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர் கிளப்பும் வாக்குமூலம்..!!

டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…

21 minutes ago

பெற்றோர்களே எச்சரிக்கை..! பூங்காவில் 4 வயது சிறுமியின் உயிரைப் பறித்த சறுக்கு மரம்… விளையாடச் சென்ற இடத்தில் விபரீதம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி, அங்கிருந்த சறுக்கு மரம் (Slide)…

28 minutes ago

டைம் முடிஞ்சி போச்சு..! ஈரானிய படகுகளைக் கண்டதும் சுட உத்தரவு.. ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த இறுதி எச்சரிக்கை..!!

ஈரான் உடனான மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருப்பினும்,…

34 minutes ago

வெறும் 3 வாரத்தில் ரூ.19,79,926 கோடி காலி… ஈரானுடன் மல்லுக்கட்டி திவாலாகும் அமெரிக்கா..? அதிரவைக்கும் பென்டகன் அறிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரில், அமெரிக்க ராணுவம் தனது அதிநவீன ஆயுதங்களை மிக அதிக அளவில்…

38 minutes ago