“1 அல்ல 2 அல்ல… 39-வது முறை”… டிரம்பின் முகத்திரையைக் கிழித்த சிஎன்என் ஆதார அறிக்கை… பின்னணியில் எலான் மஸ்க்…. அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

Spread the love

உலகளாவிய கமாடிட்டி மற்றும் நிதிச் சந்தைகளில் கடந்த சில மணிநேரங்களாக நிலவி வரும் உச்சக்கட்ட பரபரப்பிற்குப் பின்னால், ஒரு மாபெரும் சந்தை ஏமாற்று வேலைஒளிந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று இரவே ஈரான் மீது தாக்குதல் நடத்தி கார்க் தீவை கைப்பற்றப்போவதாக அறிவித்த நிலையில், அடுத்த சில மணிநேரத்தில் ஈரான் உடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த கையெழுத்திட தயாராகியுள்ளோம் என அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்புகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அமெரிக்க பங்குச்சந்தையில் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் பிரம்மாண்ட பொதுப் பங்கு வெளியீடு (IPO) வெளியாக உள்ள நிலையில், பங்குச் சந்தையைச் செயற்கையாக உயர்த்துவதற்காகவே இத்தகைய போலி அறிவிப்புகள் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சர்வதேச முன்னணி ஊடகமான சிஎன்என் வெளியிட்டுள்ள அதிரடித் தரவுகளின்படி, அமெரிக்க – ஈரான் போர் தொடங்கியதிலிருந்து “இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் மிக அருகில் உள்ளது” என்று அதிபர் டிரம்ப் உரிமை கொண்டாடுவது இது 39-ஆவது முறையாகும். டிரம்ப் இதுவரை வெளியிட்ட அத்தனை ‘ஒப்பந்த நெருக்கடி’ அறிவிப்புகளையும் ஈரான் ஒவ்வொரு முறையும் அடியோடு மறுத்து வந்துள்ளது. இது குறித்து ஈரானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரம்பின் தற்போதைய வாக்குறுதி அனைத்தும் அவரது முந்தைய போலி அறிவிப்புகளைப் போலவே முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியவை” என்று மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. மேலும், ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட அனைவரும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக டிரம்ப் கூறிய வாதத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

ஈரானிய செய்தி நிறுவனமான ‘ஃபார்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்காவுடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், ஒருவேளை ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்றால் ஈரான் விதிக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் அமெரிக்கா நிபந்தனையின்றி ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தங்களின் அணுசக்தித் திட்டத்தை (Nuclear Program) அப்படியே வைத்திருப்பது, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பது மற்றும் உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) முழுக் கட்டுப்பாட்டை நிரந்தரமாக ஈரானே வைத்திருப்பது ஆகியவை ஈரானின் முதன்மை நிபந்தனைகளாகும். இது தவிர, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள தங்களின் 24 பில்லியன் டாலர் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். அமெரிக்காவின் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து ஈரான் தங்களின் கொள்கைகளை ஒருபோதும் தளர்த்தாது என்றும், அழுத்தம் காரணமாகப் பணிய நினைத்திருந்தால் ஒரு வருடத்திற்கு முன்பே அதைச் செய்திருப்போம் என்றும் ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

இரு நாடுகள் மத்தியிலும் ஒப்பந்தம் கையெழுத்தானதும் ஹார்முஸ் வழித்தடம் உடனடியாகத் திறக்கப்படும் மற்றும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான வழித்தடம் உருவாக்கப்படும் என்ற அதிபர் டிரம்பின் பேச்சை ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முற்றிலும் மறுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என்றும், ஈரானின் அனுமதியின்றி அங்கு எவ்விதக் கப்பல் போக்குவரத்தும் சாத்தியமில்லை என்றும் அவர் மிகத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவுடனான எவ்வித இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த புவிசார் அரசியல் நாடகங்கள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Nanthini

Recent Posts

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

18 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

31 minutes ago

“வெள்ளைக்கார பாஸை கவர இப்படியா…?” உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்… இணையத்தில் கிளம்பிய விவாதம்… வைரலாகும் வீடியோ…!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…

39 minutes ago

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

46 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

55 minutes ago