லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பான IPDS அரசியல் களத்தில் தமிழ்நாடு மக்களின் மனநிலை குறித்து கருத்துகளை நடத்தி வருவது வழக்கம். தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்திய அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் 2026 தேர்தலில் போட்டியிட்டு முதல்வராக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு 55 சதவீதம் பேர் ஆம் என்றும், 29 சதவீதம் பேர் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். முதல்வராக வாய்ப்புள்ள தலைவர்கள் குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோல திமுகவின் அடுத்த தலைமை குறித்த கேள்வியும் சர்வேயில் இடம்பெற்றுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறகு திமுகவில் அந்த இடத்தை நிரப்ப தகுதி பெற்றவர் யார் என்ற கேள்விக்கு கருணாநிதியின் மகளும் ஸ்டாலினின் சகோதரியுமான திமுக எம்பி கனிமொழிக்கு 41% ஆதரவு கிடைத்துள்ளது. ஸ்டாலினின் மகனும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு 36 சதவீத ஆதரவும், ஸ்டாலின் மருமகனான சபரீசனுக்கு 13 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.
உதயநிதி திமுகவின் இளைஞர் அணி தலைவராகவும் துணை முதல்வராகவும் உள்ளார். அத்துடன் தமிழ்நாடு அரசியல் களத்தில் திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்த முகமாக கட்சியினர் உதயநிதியை முன் வைத்துள்ளனர். கனிமொழி டெல்லி அரசியலில் பெரிது கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன் நேரடி அரசியலில் ஸ்டாலினின் மருமகனான சபரீசனுக்கு 13 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. இந்த கருத்து கணிப்பு தற்போது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…