உங்க வீட்டுல எல்பிஜி கேஸ் இணைப்பு இருக்குதா? 50 லட்சம் ரூபாய் வரைக்கும் உங்களுக்கு காப்பீடு கிடைக்கும் – இது உங்களுக்கு தெரியுமா?

Spread the love

எல்ஜிபி வாடிக்கையாளர்களுக்கு இலவச காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. கேஸ் கசிவு தீ விபத்து அல்லது சிலிண்டர் வெடிப்பு போன்ற விபத்துகளில் இருந்து இது பாதுகாக்கிறது. வீடுகளில் எல்பிஜி சமையல் எரிவாயு உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். எல்பிஜி இணைப்பை வாங்கும் போது அல்லது புதுப்பிக்கும் போது இந்த காப்பீடு தானாகவே கிடைக்கிறது. இதற்காக படிவம் நிரப்பி தரவோ அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. இந்த காப்பீடு இந்தியன் ஆயில் பாரத் கேஸ் எச்பி கேஸ் போன்ற அனைத்து முக்கிய நிறுவனங்களாலும் வழங்கப்படுகிறது.

மொத்த குடும்ப விபத்து காப்பீடு 50 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. அதேபோல் தனிநபர் விபத்து இறப்பு காப்பீடு ரூ. 6 லட்சம் வரைக்கும் மருத்துவ சிகிச்சை காப்பீடு 30 லட்சம் ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது. அதாவது ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து சேதம் மதிப்பீடு 2 லட்சம் ரூபாய் வரை சூழ்நிலையை பொறுத்து ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். இந்த தொகை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரடியாக வழங்கப்படும்.

காப்பீடு பெறுவதற்கான நிபந்தனைகள்; நுகர்வோர் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். சிலிண்டர் ரெகுலேட்டர் பைப் மற்றும் அடுப்பு ஐஎஸ்ஐ முத்திரை கொண்டு இருக்க வேண்டும். கேஸ் பைப், ரெகுலேட்டரை தொடர்ந்து சரி பார்க்க வேண்டும். ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் கேஸ் விநியோகஸ்தர் மற்றும் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். எஃப்ஐஆர் நகல் மருத்துவமனை பதிவுகள் மருத்துவ பில்கள் மற்றும் இறப்பு ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனை அறிக்கை ஆகியவை அவசியம். கேஸ் இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே இந்த காப்பீடு கிடைக்கும். இதில் நாமினியை சேர்க்க முடியாது. விபத்து நடந்த இடத்தை காப்பீட்டு அதிகாரி ஆய்வு செய்வார். இதை தொடர்ந்து அவரது அறிக்கை மூலம் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு காப்பீடு தொகை கிடைக்கும்.

Elango

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

3 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

4 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

4 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

4 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago