நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். ரயில்களில் பயணம் செய்வது சவுகரியமாக இருப்பதோடு பாதுகாப்பாகவும் இருப்பதால் மக்கள் இதைத்தான் தேர்வு செய்கிறார்கள். ரயில்களில் டிக்கெட் செலவும் குறைவு. ரயில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் சீட் கிடைக்கும். ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய நிறைய வசதிகள் உள்ளது. அந்தவகையில் புதிதாக குரலை பயன்படுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். எதையும் டைப் செய்யாமல் பேசுவதன் மூலமாக ரயில் டிக்கெட்டை IRCTC மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்திய ரயில்வே AskDisha 2.0 குரல் உதவியாளரை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அம்சத்தின் உதவியுடன் உங்களுடைய சொந்த மொழியில் பேசுவதன் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் IRCTC அதிகாரப்பூர் வலைதளம் அல்லது செயலிக்கு சென்று AskDisha 2.0 என்ற ஐகான் முகப்பு பக்கத்தில் தோன்றும். அதை கிளிக் செய்ய வேண்டும். அதை பயன்படுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய் என்று கூறவேண்டும். குரல் உதவியாளர் உங்களிடம் எங்கு பயணிக்க வேண்டும்? எந்த தேதியில் பயணிக்க வேண்டும்? எந்த வகுப்பு என்ற பயண விவரங்களை கேட்பார். உங்கள் தகவலின் அடிப்படையில் ரயில் பட்டியல், நேரம், சீட் ஆகியவை வழங்கப்படும். விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும். பிறகு அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கிடைக்கும். பார்வை குறைபாடு உள்ள பயனாளர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…