“சென்னை முதல் நெல்லை வரை”… ஸ்டாலினுக்கு பயங்கர ஷாக் கொடுத்த கூட்டணி கட்சி…. திமுக புதிய பூகம்பம்….!

Spread the love

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி ஐந்து தொகுதிகளைக் கோரியுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி காலம் முதல் திமுகவுடன் நீண்டகாலத் தார்மீக உறவு கொண்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் 16 தொகுதிகள் வரை பெற்றுப் போட்டியிட்டுள்ள வரலாற்றைச் சுட்டிக்காட்டியும், இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் ஐந்து இடங்களையாவது ஒதுக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

திமுகவுடனான தங்களின் கூட்டணி என்பது வெறும் தேர்தல் கால ஒப்பந்தம் மட்டுமல்ல, அது கொள்கை ரீதியானது என்று காதர் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார். திமுகவின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக திருச்சி, சென்னை, கடலூர், நெல்லை, தஞ்சாவூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் களத்தில் நிலவும் சவால்கள் குறித்துப் பேசிய அவர், அதிமுக, பாஜக மற்றும் தவெக போன்ற கட்சிகள் இணைந்தாலும் தேர்தலைச் சந்திப்பது என்பது எப்போதும் ஒரு சவாலான காரியமே என்று கூறினார். அதே வேளையில், சீமான் தனித்துப் போட்டியிடுவதால் தமிழகத்தில் மும்முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார். இருப்பினும், மக்கள் தான் இறுதி முடிவெடுக்கும் எஜமானர்கள் என்றும், திராவிட மாடல் அரசின் சாதனைகளே அவர்களுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித் தரும் என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

7 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

8 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

9 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

9 மணத்தியாலங்கள் ago