விட்நாமிற்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணி ஒருவருக்கு அங்குள்ள உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் இனவெறி குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த உணவகத்தின் ஊழியர் “இந்தியர்களுக்கு அனுமதி இல்லை” என்று வெளிப்படையாகக் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பயணி தான் ஒரு சுற்றுலாப் பயணி என்றும், உணவருந்த மட்டுமே வந்ததாகவும் எவ்வளவோ விளக்கியும், அந்த ஊழியர் பிடிவாதமாக மறுத்ததோடு அவரை வெளியேறுமாறு சைகை காட்டினார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் அந்த உணவகத்தின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் இது போன்ற பாகுபாடுகளைச் சந்திப்பது இது முதல் முறையல்ல என்று பலர் தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளனர். அதே சமயம், விட்நாமில் உள்ள அனைத்து இடங்களிலும் இத்தகைய சூழல் இல்லை என்றும், ஒரு சில குறிப்பிட்ட இடங்களின் தவறான அணுகுமுறையால் ஒட்டுமொத்த நாட்டின் மீதும் விமர்சனம் எழுவது வருத்தமளிப்பதாக மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் விட்நாம் சுற்றுலாத் துறைக்கும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் விட்நாமிற்குச் சென்று வரும் நிலையில், இத்தகைய இனவெறிச் செயல்கள் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் மரியாதையையும் அந்த நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…