சினிமாவை பொருத்தவரையில் ஒரு படத்தில் மட்டும் ஜெய்த்து விட்டால் அத்தோடு முடிந்து விடாது தொடர்ந்து சினிமாவில் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிலைக்க முடியும். அதன்படி தொடர்ந்து வெற்றி கொடுப்பதால்தான் மக்களின் மனதை கவர்ந்து ரஜினி மற்றும் கமல் போன்ற நடிகர்கள் 60 வயதை தாண்டியும் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை விஜய், ரஜினி, கமல், அஜித், ஷாருக்கான் மற்றும் அமிதாபச்சன் போன்ற சக்ஸஸ்ஃபுல் நடிகர்கள் ஏராளமானோர் இருந்தாலும் இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் அதிக ஹிட் படங்களில் நடித்த நடிகர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அப்படி அனைத்து நடிகர்களையும் மிஞ்சிய அந்த நடிகர் மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த பிரேம் நசீர் தான். 1950களில் மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வளம் வந்தவர். அந்த காலகட்டத்தில் அதிக திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அதிகப்படியான இரட்டை வேடங்களில் நடித்தது என இவர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 1979 ஆம் ஆண்டு மட்டும் இவர் சுமார் 39 படங்களில் நடித்திருந்தார். ஒரே வருடத்தில் இத்தனை படங்களில் நடித்த ஹீரோ இவர் மட்டும்தான்.
அது மட்டுமல்லாமல் அதிக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஹீரோவும் இவர்தான். இவர் சுமார் 700 படங்களில் நடித்துள்ள நிலையில் 400 க்கும் மேற்பட்ட படங்கள் ஹிட் கொடுத்துள்ளனர். மேலும் 50 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஒரே ஹீரோவும் இவர்தான். இவருக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளார். இவர் 80 ஹிட் படங்களை கொடுத்த நிலையில் 12 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 60 ஹிட் படங்களையும் பத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். நடிகர் பிரேம் நசீர் மொத்தம் 85 ஹீரோயின்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக ஒரு நடிகையுடன் மட்டும் 130 படங்களில் நடித்துள்ளார். ஷீலா என்ற நடிகையுடன் தான் அவர் அதிகப்படியான படங்களில் நடித்தார். அது மட்டும் அல்லாமல் 40 படங்களில் இவர் டபுள் ரோலில் நடித்து சாதனை படைத்த நிலையில் அந்த சாதனையை இன்று வரை எந்த ஹீரோவும் முறியடிக்கவில்லை. இப்படி பல புகழுக்குரிய இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு காலமானார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…
பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…
கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…