அமெரிக்காவிலிருந்து 22 லட்சம் டன் எல்பிஜி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது ஆண்டின் 10 சதவீதம் எல்பிஜி தேவையை பூர்த்தி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்கா சென்று அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது.
