சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 101 வயது முதியவர் லூ ஷிஸெங் (Lu Shizeng) தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுவாக வயதானவர்கள் என்றாலே ஆரோக்கியமான மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்ற பொதுவான எண்ணம் உள்ளது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக கோகோ கோலா, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்கள் மற்றும் தட்டு நிறைய நண்டு, மீன், பன்றி இறைச்சி போன்றவைகளை விரும்பி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த தாத்தா. அதிலும் குறிப்பாக, குளிர்ந்த ஸ்பிரைட்டில் சில துளிகள் ஒயிட் ஒயின் கலந்து குடிப்பதும், அரை கிண்ணம் சாதத்துடன் ஏராளமான கடல் உணவுகளை உண்பதும் இவரது வித்தியாசமான உணவுப் பழக்கங்களில் ஒன்றாகும்.
உணவு முறையில் பல விதமான கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும், இவரது அன்றாட வாழ்க்கையில் கடுமையான நேரக் கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதிகாலை 4 மணிக்கே விழித்துக்கொள்ளும் இவர், உடனடியாக படுக்கையைவிட்டு எழாமல், படுக்கையிலேயே உடலை நீட்டி மடக்குவது போன்ற எளிய பயிற்சிகளை சுமார் இரண்டு மணி நேரம் செய்கிறார். அதன் பிறகு காலை 6 மணிக்கு எழும் இவர், மாலை 5 மணிக்கே தனது இரவு உணவை முடித்துக்கொண்டு இரவு 8 மணிக்கே தூங்கச் சென்றுவிடுகிறார். இந்த முறையான வாழ்க்கை முறைதான் இவரது ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
வயதான காலத்திலும் தன்னால் முடிந்த வேலைகளைத் தானே செய்து வந்த இவர், தள்ளுவண்டியில் மார்க்கெட்டுக்குச் சென்று தனக்குப் பிடித்த நண்டு மற்றும் காய்கறிகளைத் தாமாகவே வாங்கி வந்துள்ளார். இருப்பினும், சில மாதங்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் இவருக்கு உதவியாக ஒரு பராமரிப்பாளரை நியமித்துள்ளனர். தற்போதுவரை நல்ல நினைவாற்றலுடன் இருக்கும் இவருக்கு, சீனா அரசு சார்பில் மாதம் 800 யுவான் (நம்ம ஊர் மதிப்பில் சுமார் ரூ.11,000) முதியோர் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கோக் குடிப்பதும், நண்டு சாப்பிடுவது மட்டுமே இவரது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது என்றாலும், மரபியல், சீரான உடல் இயக்கம் மற்றும் மனதுக்குப் பிடித்தமான வாழ்க்கை முறையே இத்தகைய நீண்ட ஆயுளுக்கு அடித்தளமாக அமைகிறது. தனக்குப்பிடித்த உணவுகளைச் சுவைத்துக்கொண்டு, மகிழ்ச்சியுடன் தன் விருப்பப்படி வாழ்ந்து வரும் இந்த 101 வயது சீன தாத்தாவின் வாழ்க்கை முறை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளதுடன், நேர்மறையான சிந்தனையையும் விதைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…