தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நோக்கி அரசியல் சூழல் மெல்ல மெல்ல சூடு பிடிக்கிற தொடங்கியுள்ளது. இந்த முறையும் ஆட்சியை கைப்பற்ற திமுக தனது தேர்தல் வியூகங்களை திட்டமிட்டு வருகிறது. மக்களை கவரும் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை உருவாக்கும் பணியில் ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை கட்சியின் துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தக் குழு அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கும் விதமாக அறிக்கையை வடிவமைக்கும் என்று தெரிகிறது. திமுக தேர்தல் அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 2026 தேர்தலுக்கான முக்கிய வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு, பெண்கள் தொழில் தொடங்குவதற்கு 10,000 ரூபாய் முன்வைப்புத் தொகை வழங்கும் திட்டம் இடம்பெற உள்ளதாக தெரிகிறது. மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பு மக்கள் மத்தியில் கவனம் இருக்கும் என தெரிகிறது. கல்வி கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்புகள், காலி பணியிடங்களின் நிரப்புதல், ஊழியர்களுக்கான முக்கிய சலுகைகள் ஆகியவையும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ளது. இவை இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் அம்சமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு மேல்முறையீடு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே திட்டத்தின் பயனர்களை அதிகரிக்க முதல்வர் ஸ்டாலின் தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதை மேலும் சில நூறுகள் அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…