“டங்கமாரி ஊதாரி…” – முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை சீண்டிய இன்பன் உதயநிதி… இன்ஸ்டா ஸ்டோரியால் பற்றி எரியும் தமிழக அரசியல்…!!

Spread the love

தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே அரசியல் ரீதியான வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ‘எங்கப்பா, உங்கப்பா காணோம்’ என்ற குட்டிக்கதையைக் கூறி மறைந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் தோற்று பேரவையில் இல்லாததைச் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் விஜய்யின் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பிட்டு, “செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்” என பதிவிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அரசியல் மோதலில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதியின் சமூக ஊடகப் பதிவு தற்போது கூடுதல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திமுக இளைஞரணி தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் வெளியிட்ட பதிவை இன்பன் உதயநிதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அத்துடன், தனுஷ் நடித்த ‘அனேகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘டங்கமாரி ஊதாரி’ என்ற பாடலின் குறிப்பிட்ட சில வரிகளையும் பின்னணியில் சேர்த்துள்ளார். மனைவியைப் பிரிந்து வேறொருவருடன் வாழ்வதைக் குறிக்கும் வகையில் அமைந்த அந்தப் பாடல் வரிகள், முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை நேரடியாகத் தாக்கும் விதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்பன் உதயநிதியின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு, அதற்கு வெளியே தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை இழுத்து தரம் தாழ்ந்த முறையில் விமர்சிப்பது நாகரீகமான அரசியல் அல்ல என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இன்பன் உதயநிதி இதனை நிரந்தரப் பதிவாகப் போடாமல், 24 மணி நேரத்தில் தானாக மறையக்கூடிய ‘ஸ்டோரி’யாக மட்டுமே பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

ஆள் கடத்தலா?… அம்மாவைத் தேடி தனியாகக் கிளம்பினாரா?… கையில் பேக்.. தனியாக நின்ற சிறுமி திடீர் மாயம்… பின்னணியில் என்ன நடந்தது?…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில் வசித்து வந்த ஜார்க்கண்ட் தம்பதியான விஸ்வநாத் - கல்பனாவுக்கு, பெஸ்டி…

10 minutes ago

“அம்மா.. என்னால முடியல”!… செல்போனை பிடுங்கி டார்ச்சர்… திருமணமாகி 4 மாதம் … புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நடந்தது என்ன?…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள எச்சூரைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான ராஜேஸ்வரிக்கும், படப்பை அடுத்த அழகூரைச் சேர்ந்த சட்டப்…

16 minutes ago

“வேலைக்கு போன மனைவி வரல”… 5 நாட்கள் மர்மம்… முட்புதரில் நர்ஸ் சடலம்… கொலையாளி யார் தெரியுமா?… வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ரஞ்சித்குமாரின் மனைவி உத்திரா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

24 minutes ago

8 வயது சிறுமி எங்கே?… சிசிடிவியில் சிக்கியதா க்ளூ?… துர்கா பூஜைக்குச் சென்ற தாய்… 3 நாட்களாகத் தொடரும் மர்மம்… தீவிர தேடுதல் வேட்டை…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் மற்றும் 8 வயது மகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம்…

1 மணத்தியாலம் ago

ஒரு நொடி கவனக்குறைவு… செல்ஃபி ஆசை… எமனாக வந்த லாரி… 4 உயிர்களைப் பறித்த விபரீதம்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சிவ்புரியைச் சேர்ந்த ஏழு நண்பர்கள், மிர்சாபூரில் உள்ள விந்தியாச்சல் கோயிலுக்குச் சென்று…

1 மணத்தியாலம் ago

அடகடவுளே..! மன உளைச்சலா?… “அப்பா படம் பார்க்க கூட்டிட்டு போறாரு”… துள்ளிக்குதித்து காரில் ஏறிய பிஞ்சுகள்… நடுவழியில் நேர்ந்த பயங்கரம்…!!

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் தாக்கட் என்பவர் வருவாய்த் துறையில் அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.…

1 மணத்தியாலம் ago