‘இனி நான் படம் பண்ண போவதில்லை’… ஹிட்டான படங்களை கொடுத்த பிரபல இயக்குனரின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

By Begam on ஐப்பசி 30, 2023

Spread the love

இந்திய சினிமாவின் பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தனது தனித்துவமான திரைப்படங்கள், மூலம் ஒவ்வொரு முறையும் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துபவர். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான நேரம், பிரேமம் போன்ற படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த படங்களாகும்.

   

‘பிரேமம்’ படத்தின் வெற்றிக்கு பின்னர்  அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘கோல்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து தற்போது ‘கிஃப்ட்’ எனும் படத்தை இயக்கி வந்தார்.

   

 

இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தான் சினிமாவில் இருந்து விலகி கொள்கிறேன் என கூறியுள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ‘ எனக்கு autism spectrum disorder என்ற மூளை சார்ந்த பிரச்சனை உள்ளது.

நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. இனி சினிமா தியேட்டர் வாழ்க்கையில் இருந்து விலகி,  பாடல்கள் மற்றும் குறும் படங்கள் மட்டும் இயக்குவேன்’ என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த பதிவு…