Categories: சினிமா

நீங்க வந்தா தான் திருமணம்.. விடாப்பிடியாக இருந்த தயாரிப்பாளர்.. பிஸியான சமயத்தில் இளையராஜா எடுத்த அதிரடி முடிவு..!!

Spread the love

ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், இமான் என எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இளையராஜாவின் இசை தனித்துவமான தன்மையை கொண்டது. அன்னக்கிளி படம் மூலம் சினிமாவில் தனது இசைப் பயணத்தை தொடங்கியவர் இளையராஜா. 80 மற்றும் 90களில் இளையராஜா இசையமைக்காத படங்களே இல்லை என கூறலாம். பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பார். படம் ஓரளவு சுமாராக இருந்தாலும் இளையராஜா பாடலுக்காக சென்று பார்ப்பவர்களும் உண்டு.

ஒரு நாளைக்கு இரண்டு மூன்று படங்களுக்கு இளையராஜா இசையமைத்து எப்போதும் பிஸியாகவே இருப்பார். ஒரு இரண்டு மணி நேரத்தில் முழு படத்திற்கான பாடல்களையும் இசையமைத்து விடுவார். எப்போதும் படங்களில் பிஸியாக இருப்பதால் சினிமா தொடர்பான விழாக்கள், திருமண நிகழ்ச்சியில் இளையராஜாவால் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. அப்படி இருக்க தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவின் திருமணத்திற்கு இளையராஜா சென்றுள்ளார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

டி.சிவா பாட்டுக்கு ஒரு தலைவன், சாமி போட்ட முடிச்சு, சின்ன மாப்ளே, தெய்வவாக்கு, ராசையா, சரோஜா, மரியாதை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். இவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. சின்ன மாப்ளே படம் உருவாகி கொண்டு இருந்த போது திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உடனே டி.சிவா இளையராஜாவிடம் சென்று விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர், நீங்கள் மூவரும் கண்டிப்பாக என் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஒரு நாளைக்கு இரண்டு படம் இசையமைத்து மிகவும் பிசியாக இருந்த இளையராஜா முதலில் தயக்கம் காட்டியுள்ளார். கண்டிப்பாக நீங்கள் வந்தே தீர வேண்டும் என டி.சிவா அடம்பிடித்துள்ளார். இதனால் பிசியாக இருந்த இளையராஜா பாடல் ரெக்கார்டிங்கை தள்ளி வைத்துவிட்டு டி.சிவாவின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதற்காக அவர் கோபிசெட்டிபாளையத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத இளையராஜா டி.சிவாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது சினிமா பிரபலங்களை ஆச்சரியப்பட வைத்தது.

admin

Recent Posts

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

7 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

20 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

46 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

52 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

56 minutes ago