Categories: CINEMA

அறிமுகமாகி மூன்றே வருடங்களில் இப்படி ஒரு வளர்ச்சியா?… ‘இளையராஜா ரசிகை’ என்ற பெயரில் உருவான திரைப்படம்… ரிலீஸ் ஆகாத சோகம்!

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இளையராஜாவே தொடக்கத்தில் இங்கிருந்த கமர்ஷியல் இசையைக் கொடுக்க முடியாமல் தான் தடுமாறியதாகவும், ஆனால் 16 வயதினிலே திரைப்படத்துக்குப் பிறகு தன்னுடைய தனிப் பாணியை கண்டுகொண்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

#image_title

இளையராஜா 1976ல் அன்னக்கிளியில் அறிமுகம் ஆனார். அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஆனார். அவர் அறிமுகமாமி மூன்றே ஆண்டுகளில் ‘இளையராஜாவின் ரசிகை’ என ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு ஒரு அசுர வளர்ச்சியை இளையாராஜா பெற்றுள்ளார்.

’இளையராஜாவின் ரசிகை’ படத்தை அன்னக்கிளி புகழ் இயக்குனர்களான தேவராஜ்-மோகன் இயக்கினர். சிவசந்திரன், தீபா, ஒய்ஜிமகேந்திரா போன்றோர் நடிக்க படத்துக்கு இளையராஜாவே இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. ஆனால் . படம் வெளிவரவில்லை. அது இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு சோகமான சம்பவமாக இன்றுவரை உள்ளது.

இந்த படத்தின் கதை என்ன என்பது பற்றிய தகவல் எதுவும் இப்போது கிடைக்கப் பெறவில்லை.

 

 

vinoth

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago