தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.
ஆனாலும் அனைத்தையும் தாண்டி தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக 15 ஆண்டுகளுக்கு மேல் வலம் வந்தார். ரஹ்மானின் வரவுக்குப் பின்னரே தமிழ் சினிமாவில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை மாறியது. ஆனால் தற்போதும் பிஸியான இசையமைப்பாளராக இருக்கும் அவர் மார்ச் மாதம் சிம்ஃபொனி இசைக் கச்சேரியை நடத்தவுள்ளார்.
இது சம்மந்தமாக அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “நான் ஒரு நாள் சாலையில் சிக்னலில் என் காரில் காத்திருந்தேன். அப்போது எனக்கு அருகே வந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் ‘சார் உங்க பாட்டு மட்டும் இல்லன்னா, எப்பவோ நான் என் பொண்டாட்டியை அடிச்சே கொன்னிருப்பேன்’ என்று சொன்னார். நான் இதை எப்படிப் பார்ப்பது?” எனக் கூறியுள்ளார்.
பீகார் மாநிலம் மொகாமா தொகுதி ஜேடியூ எம்.எல்.ஏ-வும், அம்மாநில அரசியலில் 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படுபவருமான அனந்த் சிங், படுக்கையில்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உலா வந்த நபர் ஒருவர், தான் பாகிஸ்தானைச் சேர்ந்த 'ஹமீத் அன்சாரி' என்றும்,…
மகாராஷ்டிர மாநிலம் பன்வேலைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பாலி என்ற 5 வயதுச் சிறுவன்,…
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…
சாலையில் அலைந்து திரிந்த எருது ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததில், அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி தூக்கி…