Categories: சினிமா

படத்தின் கதையே தெரியாது… என்ன situationனு தெரியாது… நான் ட்யூன் போட்டேன்.. கவிஞர் எழுதுனாரு- இசைஞானி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Spread the love

இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இளையராஜா மிகவும் மென்மையான மற்றும் ஆன்மீக ரீதியான இசையைதான் அதிகமாக விரும்புவார். ஆனால் அவர் இசையமைத்ததில் பெரும்பாலானப் படங்கள் எல்லாம் கமர்ஷியல் படங்கள்தான். ஆனால் அதிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர்.

இந்நிலையில் படத்துக்காக இயக்குனர்கள் சொன்ன சூழலுக்காகதானே இளையராஜா ட்யூன் போட்டு இசையமைத்து பாடல்களை உருவாக்கினார் என்ற விமர்சனமும் அவர் மேல் எழுந்தது உண்டு. அதற்கு சமீபத்தில் இளையராஜா அளித்த தகவல் பதிலாக அமையக் கூடும்.

அது என்னவென்றால் “இளையராஜா கமல்ஹாசனின் ராஜபார்வை படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்போது மறு நாள் பூஜைக்கு பாடல் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அப்போது படத்தின் கதையே தயாராகவில்லையாம். அது கூட பரவாயில்லை, ஆனால் என்ன சூழலுக்கு பாடல் வேண்டும் என்பது கூட தெரியவில்லையாம். இயக்குனர் டூயட் பாடல் வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அப்படிப் பட்ட சூழலில்தான் இளையராஜா இசையமைக்க, கவிஞர் கண்ணதாசன் அழகே அழகே பாடலை எழுதினாராம். அந்த பாடல் இன்றளவும் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது. அந்த பாடலில் இடம்பெற்ற ராஜபார்வை என்ற வார்த்தைதான் படத்துக்கே டைட்டிலாக ஆனது.

vinoth

Recent Posts

என்னை பார்த்து குரைப்பியா…? நடுரோட்டில் துடிதுடித்த தெருநாய்…. துப்பாக்கியால் சுட்டு கொன்ற நபர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியில், பைக் ஓட்டிச் சென்ற சீருடை அணிந்த நபர் ஒருவர் மீது அங்குள்ள…

10 minutes ago

“என்னை காப்பாற்றுங்கள்… இல்லையேல் செத்துவிடுவேன்…” தினமும் ப்ரீயா கேட்டா எங்க போவேன்….? கதறிய பானிபூரி கடைக்காரர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.…

19 minutes ago

கேள்வி கேட்க முதுகெலும்பு இருக்கா…? உங்க வீட்டு பிள்ளைகளை விடுவீங்களா…? தனுஷ், சிவகார்த்திகேயனை கிழித்த பிரபல சினிமா விமர்சகர்…!!

விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…

24 minutes ago

அப்படி என்னதான் இருக்கு…? “இதய இமோஜியால் டாலரை மறைத்த த்ரிஷா…” ரசிகர்களின் கேள்விகளால் சூடேறிய சோஷியல் மீடியா…!!

நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…

33 minutes ago

45 நிமிட போராட்டம்…! நானா படேக்கரின் இதய துடிப்பை கொண்டு வர போராடிய மருத்துவர்கள்… கடைசியில் நடந்த சோகம்…!!

இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…

41 minutes ago

நள்ளிரவில் ஸ்டார் ஹோட்டலில் களேபரம்…! இளம்பெண்களை கடத்த முயன்ற நபர்கள்… நண்பர்கள் மீது தாக்குதல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…

52 minutes ago