#image_title
தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
தமிழ் சினிமாவில் இருபெரும் நட்சத்திரங்களாக உருவாகிவந்த ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரின் படங்களின் வெற்றிக்கும் இளையராஜாவின் பங்கு அளப்பறியது. அவரது பாடல்கள் அனைத்துவிதமான ரசிகர்களிடமும் ரஜினி, கமலை கொண்டு சென்றது.
ஆனால் வள்ளி படத்துக்கு பிறகு ரஜினி படத்துக்கு இளையராஜா இசையமைப்பது நின்றது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் அதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் மன்னன் படத்துக்கு இளையராஜா இசையமைக்கும் போது அந்த படத்தில் இடம்பெற்ற “அம்மா என்றழைக்காத” பாடலை உருவாக்கியுள்ளார்.
அந்த பாடலைக் கேட்ட ரஜினி “பாடல் மிக மெதுவாக இருக்கிறது. ரசிகர்களுக்கு பிடிக்குமா என்று கேட்டுள்ளார். இதை இயக்குனரும் இளையராஜாவிடம் சொல்லியுள்ளார். அதற்கு இளையராஜா “இந்த பாடல் ஹிட்டாகவில்லை என்றால் ஆர்மோனியத்தில் கைவைப்பதையே நிறுத்தி விடுகிறேன்” என உறுதியாக கூறியுள்ளார்.
இளையராஜா இவ்வளவு நம்பிக்கையோடு பேசுவதைக் கேட்டபிறகு ரஜினி அந்த பாடலில் நடித்துள்ளார். இளையராஜா சொன்னது போலவே அந்த பாடலும் ஹிட்டாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் 30 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பாடலாக உள்ளது.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…
குஜராத் மாநிலம் சூரத்தின் உத்னா பகுதியில், அக்டோபர் 24 அன்று 23 வயதான காஜல் என்ற பெண், அவரது முன்னாள்…
ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…
தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…
மத்தியப் பிரதேச மாநிலம் பத்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அக்ஷித், வெறும் 200 ரூபாய் மதிப்புள்ள அதிர்ஷ்டக்…
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…