“வெளியே சொன்னா கொன்னுடுவேன்!”.. 14 வயது வளர்ப்பு மகளை மிரட்டி சீரழித்த தந்தை.. மருத்துவமனையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்..!!

Spread the love

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதுப் பெண்ணுக்கு, முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது. அவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். விவாகரத்திற்குப் பிறகு, அப்பெண் ரஞ்சித் கோஸ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தங்களது சொந்த ஊரில் போதிய வருமானம் இல்லாததால், பிழைப்புத் தேடி தனது 14 வயது வளர்ப்பு மகளுடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிக்கு வந்து, அங்குத் தனி வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

காங்கேயத்தில் வசித்து வந்த ரஞ்சித் கோஸ், தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 14 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துள்ளார். இக்கொடூரம் குறித்துத் தாயிடம் கூறினால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறாமல் மௌனமாக இருந்துள்ளார். இதனைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ரஞ்சித், மீண்டும் மீண்டும் பலமுறை அச்சிறுமிக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

தொடர் அத்துமீறல்களால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்படவே, அவரது தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்து உடனடியாக மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசாரின் விசாரணையில், மாற்றாந்தந்தை செய்த அராஜகங்களைச் சிறுமி கண்ணீருடன் விவரித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயின் புகாரின் பேரில், போலீசார் ரஞ்சித் கோஸைக் கிடுக்குப்பிடி விசாரணை செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Muthu Mani

Recent Posts

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரில் நடந்த அதிசயம்… கேஎப்சி பார்க்கிங்கில் பிறந்த குழந்தை… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா…?

பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…

21 minutes ago

“யாராவது காப்பாத்துங்க… ஏரியில் கேட்ட அலறல் சத்தம்”…. ஓடிச்சென்று உயிரைக் காப்பாற்றிய மா.சுப்பிரமணியன்….. வேடந்தாங்கல் ஏரியில் நடந்த நிஜ த்ரில்லர் சம்பவம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…

43 minutes ago

“புதுசா வந்தவங்களுக்கு சீட்டா?… தொண்டர்கள் என்ன லூசா?”…. “கூட்டணியில இருந்துகிட்டே இப்படி ஒரு குண்டா?”… CM விஜய்யை வெளுத்து வாங்கிய கார்த்தி சிதம்பரம்….!

அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…

51 minutes ago

இடைத்தேர்தல் விலகலுக்கு பின்னால் ஜான் ஆரோக்கியசாமி…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்… சாய்ந்த அன்புமணி… வெளிவந்த உண்மை….!

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…

56 minutes ago

“மாற்றுத்திறனாளி மகனின் சிகிச்சை…” கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… அலறி துடித்த மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…

58 minutes ago

“உங்க பொண்ணு தனியா போறா…” இரவில் வீட்டை விட்டு போன 14 வயது சிறுமி… தேடி அழைத்து வந்த பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…

1 மணத்தியாலம் ago