சமூக வலைதளங்களில் நெஞ்சை உருக்கும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு எதிர்பாராத பரிசாக ஒரு புதிய ஏர் கூலரை வழங்குகின்றனர். சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை அழைத்த வீட்டின் உரிமையாளர், ஒரு பெரிய பெட்டியைக் காட்டுகிறார். அது தனக்கான புதிய கூலர் என்பதை உணர்ந்தவுடன், அந்தப் பெண் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
மேலும் ஒரு குழந்தையைப் போல துள்ளிக் குதித்த அவர், மிகுந்த நெகிழ்ச்சியுடன் தனது உரிமையாளரை ஓடிச் சென்று ஆரத்தழுவிக் கொண்டார். அந்தப் பெண் தங்கள் குடும்பத்தையும், வளர்ப்பு நாய்களையும் தன் குழந்தைகளைப் போலப் பார்த்துக் கொள்வதால், அவருக்கும் இத்தகைய வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பரிசை வழங்கியதாக அந்த உரிமையாளர் பதிவிட்டுள்ளார்.
A post shared by Coco & Chico 🐾 (@lifeofcocoandchico)
“>
இதனால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மனிதாபிமானத்திற்கும் அன்பிற்கும் எல்லை இல்லை என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, இணையவாசிகள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. கடின உழைப்பாளிகளுக்குக் கிடைக்கும் இத்தகைய கௌரவம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…