ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் திருடும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு பிரிவு (14C) முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஒரு மொபைல் திரையை மற்றொருவர் பார்க்கும் வசதி கொண்ட ‘ஸ்க்ரீன் ஷேரிங்’ செயலிகள் மூலம் மோசடி கும்பல் பொதுமக்களின் ரகசியத் தகவல்களைத் திருடுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்ப ரீதியாக ஒரு போனை வேறொரு இடத்திலிருந்து இயக்க உதவும் வசதியைத் தவறாகப் பயன்படுத்தி, நொடிப் பொழுதில் பணத்தைச் சுருட்டும் வேலைகள் அரங்கேறி வருகின்றன.
இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க Any Desk, TeamViewer மற்றும் Quick Support ஆகிய மூன்று பிரபலமான செயலிகளை உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்யுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. தொழில்நுட்ப உதவி என்ற பெயரில் உங்களைத் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யச் சொல்லி உங்கள் மொபைல் கட்டுப்பாட்டை எடுத்து நிதி இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, மொபைல் பாதுகாப்பு கருதி தேவையற்ற மூன்றாம் தரப்பு செயலிகளைத் தவிர்த்து, வங்கி விவரங்களை ரகசியமாக வைப்பது அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…
மதுரை புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் மர்ம…
புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…
தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…
பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…