இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இதன் காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த ரசிகர்களை கவர்ந்த வடிவேலு தற்போது மாமன்னன் திரைப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வடிவேலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு குறித்து விமர்சித்துள்ள சினிமாவின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், மாமன்னன் திரைப்படம் தோல்வியில் முடிந்தால் அதற்கு முழு காரணம் வடிவேலாக மட்டும் தான் இருக்க முடியும்.

வடிவேலுவை இதுவரை ஒரு கோமாளியாகவும் காமெடியனாகவும் பார்த்தவர்கள் இந்த திரைப்படத்தில் குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாகத்தான் போகும் வடிவேலுவின் கதாபாத்திரம். வடிவேலு முழுக்க முழுக்க ஒரு சைக்கோ. சக நடிகர்கள் யாராவது உதவி கேட்டால் அதை செய்ய மாட்டார். அதே சமயம் தனக்கு பின்னால் நடிக்கும் துணை நடிகர்கள் யாராவது தன்னைவிட நன்றாக நடித்தால் அதனை பொறுக்க முடியாமல் வடிவேலு தலையில் அடித்து அவர்களை மட்டம் தட்டுவார்.

இப்படிப்பட்ட ஒரு குணத்தை கொண்ட வடிவேல் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் ஏற்க முடியாதது. இந்த படம் தோல்வி அடைந்தால் அதற்கு முழு காரணம் வடிவேலு மட்டும் தான் என்று மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு அவர்கள் தெரிவித்துள்ளார்.
