4 மாத கர்ப்பம்.. வயிற்றில் அடித்ததில் என் குழந்தை இறந்தது… நான் ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க நினைப்பேனா..? பாடகி கெனிஷா உருக்கம்..!!

Spread the love

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) தனது மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அவரும் பாடகி கெனிஷாவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொண்டது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. இதனால் ஆர்த்தி ரவிக்கு ஆதரவாகவும் கெனிஷாவிற்கு எதிராகவும் அவதூறுகள் கிளம்பிய நிலையில், ஆர்த்தி தொடர்பாக அவதூறு கருத்துகளை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த பரபரப்பான சூழலில், பாடகி கெனிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது வாழ்க்கையில் சந்தித்த துயரங்களையும் ஜெயம் ரவியுடனான தனது உண்மையான உறவையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் தனது கண்ணீர்ப் பக்கங்களை உடைத்துப் பேசிய கெனிஷா, “என் பெயர் கெனிஷா. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நான், 4-ஆம் வகுப்பு படிக்கும் போதே எனது உறவினர் ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். விவரம் தெரியாத 18 வயதில் எனக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், என் கணவருடன் தோழிகள் என்ற பெயரில் 10, 15 பெண்கள் உறவில் இருந்தனர். அவருடன் சில மாதங்களே வாழ்ந்த நிலையில், 4 மாதக் கர்ப்பிணியாக இருந்த என்னை அவர் கொடூரமாகத் தாக்கியதால் பனிக்குடம் உடைந்து என் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. அந்த நரக வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து, அடுத்த 10 ஆண்டுகளில் என் சொந்தக் காலில் நின்றேன்” என்று உருக்கமாகக் கூறினார்.

தனது கடினமான திரைப்பயணம் மற்றும் ஜெயம் ரவி உடனான நட்பு குறித்து விளக்கிய அவர், “நெட்டிசன்கள் விமர்சிப்பது போல், ஆரம்பத்தில் ரூ. 500 சம்பளத்திற்காகப் பாரில் பாடித் தான் என் பயணத்தைத் தொடங்கினேன். அதில் என்ன தவறு? இன்று பெரிய இசை நிகழ்ச்சிகளில் பாடும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். இந்த வளர்ச்சிக்கு நான் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளவில்லை. எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர், பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளேன் என்றெல்லாம் அறிவில்லாமல் பேசுகிறார்கள். நான் ரவி மோகனைச் சந்தித்தபோது அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு கடினமான காலகட்டத்தில் இருந்தார். ஒரு தெரபிஸ்ட்டாக (Therapist) அவருக்கு என்னால் முடிந்த அறிவுரைகளை வழங்கினேன், அவ்வளவுதான்” எனத் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், தன் மீது சுமத்தப்படும் குடும்பத்தை உடைத்த பழிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். “வயிற்றிலேயே ஒரு குழந்தையை இழந்த துரோகத்தை அனுபவித்த நான், ரவி மோகனின் குடும்பத்தைக் கெடுக்க நினைப்பேனா? அவர் ஒன்றும் குழந்தை கிடையாது, தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரேதான் முடிவெடுக்க வேண்டும்; இதில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்? நானும் ரவி மோகனும் உங்கள் கண்முன்னேதான் இருக்கிறோம், எங்கும் ஓடிப்போகவில்லை. சமூகத்தில் மக்களின் உண்மையான பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன, அதைப் பற்றிப் பேசுங்கள். தயவுசெய்து உங்கள் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்” என்று கோபத்துடனும் கவலையுடனும் கெனிஷா பேசியுள்ளார்

Swetha

Recent Posts

அதிர்ச்சி… பட்டப்பகலில் அரங்கேறிய குண்டாந்தடி தாக்குதல்… நீதியை மூடி மறைக்கிறதா காவல்துறை?… ஆக்ராவை உலுக்கும் அரசியல் அராஜகம்…!

ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…

13 minutes ago

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

21 minutes ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

27 minutes ago

திக்… திக்… வீட்டில் சடலமாக கிடந்த கணவன்-மனைவி… கதறியபடி மீட்கப்பட்ட 2 வயது குழந்தை… பின்னணி என்ன?… கன்னோஜில் உலுக்கிய கொடூரம்…!

கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…

42 minutes ago

விபத்தா?… இல்ல கொலையா?… இதயத்தில் ஆணி பாய்ந்து ஊழியர்… துடிதுடித்து இறந்த பகீர் சம்பவம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்…!!

நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…

50 minutes ago

இத்தனை வருஷ வேர்வை வீண் போகல… காவல் அதிகாரியின் நெகிழ்ச்சியான பதவி உயர்வு தருணம்… ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…

1 மணத்தியாலம் ago