Categories: சினிமா

90kg To 52kg குறைச்சேன்… Organs எல்லாம் போயிடும்னு சொன்னாங்க… ஐ படத்திற்காக பட்ட கஷ்டங்களை பகிர்ந்த விக்ரம்…

Spread the love

விக்ரம் தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகர் ஆவார். 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணியே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்ரம் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். பின்னர் 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். இத்திரைப்படம் அவரை மிகவும் பிரபலமாக்கியது.

அடுத்ததாக விண்ணுக்கும் மண்ணுக்கும், பிதாமகன், சாமி, தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், காதல் சடுகுடு போன்ற தொடர் ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் விக்ரம்.
பின்பு அந்நியன், மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், ஐ, இருமுகன், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் போன்ற கமர்சியல் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவரானார் விக்ரம்.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம். இந்த வருடம் அவர் நடிப்பில் தங்கலான் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விக்ரம் ஒரு படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை பற்றி பகிர்ந்து கொண்டு உள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், ஐ படத்திற்காக நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அதில் நிறைய கெட்டப்கள் வரும். முதலில் பாடி பில்டர், அடுத்ததாக மாடல் அடுத்ததாக நலிந்து மெலிந்த வயதான தோற்றத்தில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்காக 90 கிலோவில் இருந்து 52 கிலோ வரை என்னுடைய எடையை குறைத்தேன். தினமும் 50 கலோரிகள் அளவுக்கு தான் சாப்பிட வேண்டும். ஆனால் எடையை குறைக்க 100 கலோரிகள் பர்ன் செய்ய ஒர்க்அவுட் செய்வேன். நான் செய்வதை பார்த்து டாக்டரே பயந்துட்டாரு. ஒரு கட்டத்துல நீங்க இந்த மாதிரி பண்ணுனீங்கன்னா உங்களோட ஆர்கன்ஸ் எல்லாம் போயிடும் அப்படின்னு எனக்கு சொன்னாங்க. அந்த அளவுக்கு அந்த படத்துக்காக நான் கஷ்டப்பட்டு இருக்கேன். ஆனா அது ரொம்ப தவறான விஷயம் அப்படி நான் செஞ்சிருக்கவே கூடாது என்று கூறியிருக்கிறார் விக்ரம்.

admin

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

8 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

8 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

8 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

9 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

9 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

9 மணத்தியாலங்கள் ago