மனைவியின் டார்ச்சர் தாங்க முடியல… என்னை கருணைக் கொலை செய்துருங்க சார்.. கலெக்டரிடம் மனு கொடுத்த கணவர்…!

Spread the love

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த கிரித் படேல் என்ற நபர், தனது மனைவியால் ஏற்படும் தொடர் துன்புறுத்தல் மற்றும் மன உளைச்சல் காரணமாக தனக்கு ‘கருணைக்கொலை’ செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இது தங்களுக்குள் இருக்கும் குடும்பப் தகராறு மற்றும் நாட்டின் சட்ட நடைமுறைகள் குறித்து சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனுவில் கிரித் படேல், தனக்கும் தனது மனைவிக்கும் இது 3-வது திருமணம் என்றும், தனது மனைவி பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி தன் மீது பொய் புகார்களை அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தையை மனைவி துன்புறுத்த முயன்றதாகவும், இது குறித்துப் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவொரு வழக்கும் (FIR) பதிவு செய்யப்படவில்லை என்றும், இதனால் அரசாங்க அதிகாரிகள் மீதும் சட்டத்தின் மீதும் தனக்கு நம்பிக்கை அற்றுப் போய்விட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் மற்றும் இதுபோன்ற புகார்களில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய உரிய சட்டப் பாதுகாப்பு இல்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான முடிவுகள் ஏதும் அறிவிக்கப்படாத நிலையில், குடும்பத் தகராறுகளில் ஆண்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் சட்டப் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

Swetha

Recent Posts

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

14 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

18 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

44 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

1 மணத்தியாலம் ago