“தூங்கிய கணவன்.. கையில் அம்மிக்கல்லுடன் மனைவி”… சேலத்தில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்….!

Spread the love

சேலம் அம்மாபேட்டையில் கணவனின் தொடர் சந்தேகத்தால் ஆத்திரமடைந்த மனைவி, நள்ளிரவில் கணவனை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதான தங்கம், டேப் கட்டில் பின்னும் தொழில் செய்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்மா (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஒரு ஆண்டாக வையாபுரி உடையார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், தங்கத்தின் குடிப்பழக்கம் தீராத வினையாக மாறியது. மதுவுக்கு அடிமையான தங்கம், தனது மனைவி பத்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் தங்கத்தின் தாய் காலமான நிலையில், துக்கம் விசாரிக்க பத்மா அடிக்கடி உறவினர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார். இதையும் தவறாகப் புரிந்துகொண்ட தங்கம், சொந்த தம்பியோடு சேர்த்தே பத்மாவை இழிவுபடுத்திப் பேசி அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரவு, வழக்கம் போல மது போதையில் வந்த தங்கம், பத்மாவை மிகக் கேவலமாகப் பேசி கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட பத்மா, வேதனையின் உச்சத்துக்கே சென்றார். நள்ளிரவில் தங்கம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, இனியும் இந்தச் சித்ரவதையைத் தாங்க முடியாது என்ற ஆத்திரத்தில், வீட்டிலிருந்த அம்மிக்கல்லை (குழவி கல்) எடுத்துத் தூங்கிக் கொண்டிருந்த தங்கத்தின் தலையில் ஓங்கிப் போட்டுள்ளார். இதில் தங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார், தங்கத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கணவனின் தொடர் சந்தேகமும் உடல் ரீதியான சித்ரவதையுமே இந்த முடிவுக்குக் காரணம் என பத்மா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் பத்மாவைக் கைது செய்தனர். தேவையற்ற சந்தேகத்தால் ஒரு அழகான குடும்பம் சிதைந்து, மூன்று குழந்தைகள் அனாதையாக நிற்கும் இச்சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ரூ.135 கோடி மெத் வேட்டை…. சிக்கிய தவெக பிரமுகர்…. டிஎஸ்பி டிரைவர், பெண் போலீஸ் அதிரடி ட்ரான்ஸ்ஃபர்…. திடுக்கிடும் பின்னணி….!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சர்வதேச சந்தையில் சுமார் ரூ.135 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்…

1 minute ago

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு..!

சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைத் தொடர்ந்து, தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று…

5 minutes ago

“விஜய் ரூட்டில் அண்ணாமலை?”…. ஆழம் பார்க்கும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு…. அடுத்த பிளான் இதுதானா?…. ஷாக்கில் பிரதான கட்சிகள்….!

பாஜகவில் இருந்து விலகி "வீ தி லீடர்ஸ்" அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, விரைவில் அரசியல் கட்சியாக உருவெடுக்க உள்ள…

9 minutes ago

திடீர் நியமனம்….. ‘We The Leaders’ அமைப்பில் அண்ணாமலை எடுத்த அந்த அதிரடி முடிவு…. உத்தம ராமசாமிக்கு முக்கிய பதவி….!

பாஜக முன்னாள் மாநில தலைவர் K. அண்ணாமலை தற்போது தனியாக கட்சி தொடங்கியுள்ள நிலையில் விஜயதசமி நன்னாளில், 'We The…

13 minutes ago

திமுகவில் இருந்து விலகல்?…. பாஜகவுக்கு தாவும் முன்னாள் எம்பி மைத்ரேயன்?…. நள்ளிரவில் அவரே போட்ட பரபரப்பு போஸ்ட்…..!

திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் முன்னாள் எம்பி மைத்ரேயனின் நள்ளிரவு எக்ஸ் (X) பதிவு அரசியல் வட்டாரத்தில்…

17 minutes ago