தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் பூங்கொடி. இவருடைய மகள் மகாலட்சுமி. 29 வயதான இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மகாலட்சுமி குழந்தைகளுடன் தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அரூருக்கு வந்த வெங்கடேஷ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு காலையில் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் இருந்தபோது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் மகாலட்சுமி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .இதனை அடுத்து இரண்டு குழந்தைகளையும் வெங்கடேஷ் அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். தலைமறைவான வெங்கடேசை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
