திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தட்டாங்குளம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய காளீஸ்வரி என்ற பெண், கள்ளத்தொடர்பு விவகாரம் காரணமாக அவரது இரண்டாவது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். காளீஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்த நிலையில், மகுடீஸ்வரன் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், காளீஸ்வரிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் கடுமையான வாக்குவாதம் வெடித்ததில், ஆத்திரமடைந்த மகுடீஸ்வரன், காளீஸ்வரியின் தலையில் கல்லைப்போட்டு அவரைப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த காளீஸ்வரியை மீட்ட காவல்துறையினர், இக்கொலை குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, மகுடீஸ்வரன் தான் இந்தக் கொலையைச் செய்தார் என்பது உறுதியானது. கேமரா காட்சிகளின் ஆதாரத்தை வைத்துத் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனைப் போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது அவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…