ரத்தக் கறை படிந்த அரிவாள்… கட்டிலுக்கு அடியில் கிடந்த அனிதா… கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்…விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!!

By Soundarya on அக்டோபர் 29, 2025

Spread the love

உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அனிதா அனிலின் தாய் மாமா மகள் . திருமணத்திற்குப் பிறகு, அனில் தனது மனைவி அனிதா மற்றும் தம்பி சச்சினுடன் பிலிபிட் நெடுஞ்சாலையில் உள்ள ஹர்துவா கிராமத்திற்கு எதிரே உள்ள ஓம் நகரத்திற்கு குடிபெயர்ந்தார்கள் இந்த ஜோடி. அனில் டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்கிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை இரண்டு சகோதரர்களும் வேலைக்குச் சென்றனர். மாலையில் திரும்பி வந்தபோது, ​​வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். அனிதாவின் மொபைல் போன் அணைக்கப்பட்டிருந்தது.

பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, ​​படுக்கைக்கு அருகில் தரையில் அனிதாவின் உடல் கிடந்தது. அறை முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடந்தன, அருகில் ரத்தக் கறை படிந்த அரிவாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த வடக்கு காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சந்திர மிஸ்ரா சம்பவ இடத்திற்கு வந்து அனிலை விசாரித்தார். அன்று காலை வேலைக்குச் சென்ற பிறகு, அடையாளம் தெரியாத ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து அனிதாவைக் கொலை செய்ததாக அனில் கூறினார்.

   

இருப்பினும், விசாரணையின் போது, ​​அனிதாவின் சகோதரர் சந்திரபால், அனில், சச்சின், அவரது மாமியார் மற்றும் மற்றொரு உறவினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு  புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அனில் மற்றும் சச்சினை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அனில் தான் முக்கிய சந்தேக நபர் என்று தெரியவந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். அனிதா மீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது, அதை அனிதா எதிர்த்தார். விசாரணையின் போது இந்த உண்மைகள் உறுதி செய்யப்பட்டால் வெளிப்படும்.