கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் திருமணமான பெண்ணுக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சையத் இனமுல் ஹக் என்ற நபரை கடந்த 2024 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட அந்த பெண் திருமணம் செய்துள்ளார். இதனிடையே திருமணத்தின் போது 340 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு பைக் வரதட்சணையாக வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு தான் கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதும் தான் அவருடைய இரண்டாவது மனைவி என்றும் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. மேலும் தனக்கு வேறு 19 பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கணவர் தற்பெருமை பேசியதாக கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் கணவர் ரகசியமாக படுக்கையறையில் கேமராவை வைத்து அவர்களது அந்தரங்க தருணங்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை வெளிநாடுகளில் இருக்கும் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் கணவர் பகிர்ந்ததுடன் வெளிநாட்டில் உள்ள தனது தொடர்புகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு மனைவியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததால் அந்தரங்க வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
மேலும் அப்பார்ட்மெண்ட் வாங்குவதற்காக மனைவியின் நகைகளை விற்று பணம் கொண்டு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுத்ததால் கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல் மாமனார் மற்றும் மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். மைத்துனர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள அந்த நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…
ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…
அஜ்மீர் ரயில் நிலையத்தில் பரேலிக்குச் செல்வதற்காக ஓடும் ரயிலில் ஏற முயன்ற 39 வயதுடைய ரேஷ்மா என்ற பெண் கால்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…